சபாநாயகரின் பட்ட சர்ச்சை : கிளம்பும் எதிர்ப்பு
நாடாளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகர் அசோக ரன்வலவின்(ashoka ranjwalla) பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதி பட்டம் இன்று (10) நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு சபாநாயகர் பதில் அளிக்க முடியாவிட்டால் அவர் உடனடியாக. பதவி விலக வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரளthalatha atukorale) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சபாநாயகர் முதுகலைப் பட்டம் பெற்றதாகக் கூறப்படும் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் அவ்வாறான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என அத்துகோரள தெரிவித்தார்.
கட்சிகள் நாட்டை அழித்து விட்டதாக குற்றச்சாட்டு
புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த தலதா அத்துகோரள,
எழுபத்தாறு ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் நாட்டை அழித்து விட்டதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய இரு கட்சிகளும் கருத்து தெரிவித்தன.
இந்நாட்டின் அதியுயர் அமைப்பான நாடாளுமன்றத்தின் தலைவரான சபாநாயகர் குறித்து இன்று பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. பொதுவாக எம்.பி.யின் பட்டதாரி கல்வித் தகுதிகள் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
சபாநாயகர் அளித்துள்ள பதில்
முதலில் நாடாளுமன்ற இணையத்தளத்தில் கலாநிதி அசோக ரன்வலவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இன்று அவரின் பெயருக்கு முன்னால் உள்ள கலாநிதி என்ற வார்த்தை நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக ஆர்வலர் கலாநிதி நிமல்கா பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.
இதேவேளை தனது பட்ட சர்ச்சை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |