பங்களாவை ஆக்கிரமித்துள்ள முன்னாள் தமிழ் எம்.பி : உடன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்(vadivel suresh),ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று (10) நடைபெற்ற பதுளை(badulla) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன(samantha vidyaratna) தெரிவித்தார்.
தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து
வடிவேல் சுரேஷை அங்கிருந்து வெளியேற்றாமல், அநீதியாக செயற்பட்டால் தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலவந்தமாக தங்கியிருந்த செந்தில் தொண்டமான்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானும்(Senthil Thondaman) டிக்வெல்ல தோட்டத்தில் உள்ள பங்களா ஒன்றில் 13 வருடங்களாக பலவந்தமாக தங்கியிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |