யாழில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை : காவல்துறையில் முறைப்பாடு
Missing Persons
Jaffna
Sri Lanka Police Investigation
By Sumithiran
யாழ்ப்பாணம் நவாலி பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் கஜமோகன் என்ற இளம் குடும்பஸ்தரை காணவில்லை என சுன்னாகம் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று(09) ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டவரை காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் காவல்துறையினர் விசாரணை
இது தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0753823347,0766663319 இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்