பிரான்ஸில் சாதித்த யாழ்ப்பாண தமிழன் கட்டுநாயக்காவில் கால் பதித்தார்
2023 ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைசிறந்த "பக்கோடா" பாண் தயாரிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு ஒரு வருட காலத்திற்கு தனது பேக்கரி பொருட்களை பிரான்ஸ் அதிபர் மாளிகைக்கு வழங்கும் ஒப்பந்தம் பெற்ற தர்ஷன் செல்வராஜ் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜ், தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது மனைவியுடன் இலங்கைக்கான மூன்று வார விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பிரான்ஸ் சென்றபோது எதுவும் தெரியாது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷன் செல்வராஜ், 2016-ம் ஆண்டு பிரான்ஸ் சென்றிருந்தேன். போனபோது பிரெஞ்சு மொழி தெரியாது.அதுமட்டுமன்றி பேக்கரி வேலையும் தெரியாது.ஆனால் அங்கு வேலைக்கு சென்றேன். பிரான்சின் பாரிஸில் உள்ள "au Levain Des Pyrenees" என்ற பேக்கரி. உரிமையாளர் மிகவும் நட்பான நபர். அவர் எனக்கு பிரஞ்சு மொழியையும் பேக்கரி தொழிலையும் கற்றுக் கொடுத்தார்.
2023 இல் கிடைத்த வெற்றி
இப்போது அவருக்கு 70 வயதாகிறது. நான் அந்த பேக்கரியை 03 வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். பிரான்சின் பாரிஸில் 1,300 பதிவு செய்யப்பட்ட பேக்கரி தயாரிப்பாளர்கள் உள்ளனர். அவர்களுடன் போட்டியிட்டு 2023 இல் சிறந்த பிரெஞ்சு "பேகுட்" பாண் தயாரிப்பாளராக வெற்றி பெற முடிந்தது. அதனால்தான் பிரான்ஸ் அதிபரின் இல்லத்திற்கு ஓராண்டுக்கு "பாகு" பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களை விநியோகம் செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தர்ஷன் செல்வராஜின் சாதனைகள் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டபோது, திருமதி துருவி குணசேகர பிரான்ஸ், பாரிஸ் நகருக்குச் சென்று அவரைச் சந்தித்து இந்த இலங்கை விஜயத்தை ஏற்பாடு செய்ய ஊக்குவித்தார்.
தர்ஷன் செல்வராஜ் 07/28 அன்று காலை 09.30 மணியளவில் Etihad Airlines விமானமான EY-278 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.