சுவிஸ் தூதுவருக்கு சுமந்திரன் அழுத்தம் : இழுபறியில் கொழும்பு சந்திப்பு

Colombo Gajendrakumar Ponnambalam M A Sumanthiran Suresh Premachandran Switzerland
By Sumithiran Feb 10, 2026 01:37 PM GMT
Report

  சுவிஸ் அரசின் ஏற்பாட்டில் அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சந்திப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடு காரணமாக இழுபறிக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 19ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தச் சந்திப்பை ரத்துச் செய்யுமாறு எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளும், சிவில் சமூகத்தின் சார்பில் மூத்த சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும் பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்த கஜேந்திரகுமார்

இந்த நிலையில், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் ஒன்றுக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதுவருக்கு சுமந்திரன் அழுத்தம் : இழுபறியில் கொழும்பு சந்திப்பு | Sumanthiran Presses Swiss Ambassador

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய 15 வரையான சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிற்குப் பதிலளித்த தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் கலந்துரையாடலில் பங்கேற்ற முடியாது என்றும், கட்சியின் பிரதிநிதியொருவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

தலைவர் பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம்! சிவாஜிலிங்கம் விளக்கம்

தலைவர் பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம்! சிவாஜிலிங்கம் விளக்கம்

கூட்டத்தை இரத்து செய்ய கோரிய சுமந்திரன்

இந்த நிலையில், அரசியல்தீர்வு குறித்து கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்துள்ளமை குறித்து சுவிஸ் தூதுவரிடம் அதிருப்தி வெளிப்படுத்திய எம்.ஏ.சுமந்திரன், 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச் செய்யும்படி கோரியுள்ளார்.

சுவிஸ் தூதுவருக்கு சுமந்திரன் அழுத்தம் : இழுபறியில் கொழும்பு சந்திப்பு | Sumanthiran Presses Swiss Ambassador

இதையடுத்து குறித்த நாளில் சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அது பிற்போடப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது. இந்தச் சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தெற்கே பயணித்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா

இலங்கைக்கு தெற்கே பயணித்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026