செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை - நீதி கோரி ஐ.நா.வுக்கு கடிதம்
கிளிநொச்சியில் (Kilinochchi) செம்மணி படுகொலை மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு நீதி கோரி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்துக்கான கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுதுத்தியே இந்த நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
நேற்று யாழ்ப்பாணம் செம்மணியில் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டம் இன்று கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி வரை குறித்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது
இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 4 மணி நேரம் முன்
