இஸ்ரேலுடனான உறவு அழிக்கப்பட்டுவிட்டது:அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கருத்து
இஸ்ரேலுடனான வரலாற்று உறவு அழிக்கப்பட்டு விட்டது என அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் பீட்டர் வெல்ச் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுடனான நமது வரலாற்று உறவானது, யூத ஜனநாயக அரசின் மீதான நமது மரியாதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
அதுமட்டுமின்றி, எண்ணெய் விநியோகத்திற்கு அத்தியாவசியமானது என அமெரிக்கா கருதிய, அதைச் சுற்றியுள்ள அச்சுறுத்தலான அரபு உலகிற்கு எதிரான ஒரு கூட்டாளியாக இஸ்ரேல் இருந்ததையும் அது அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது இப்போது அழிக்கப்பட்டுவிட்டது எனவும் அவரது கருத்தை முன்வைத்துள்ளார்.
விளைவுகள் ஆழமானதாக இருக்கும்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கம் குறித்து ஜனநாயகக் கட்சியினரிடையே "ஒருமித்த எதிர்ப்பு மற்றும் அவநம்பிக்கை நிலை" உருவாகியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காசாவில் நடந்த இஸ்ரேலியப் போரும், ஈரானுக்கு எதிரான போரில் நெதன்யாகுவின் பங்கும் இடைக்காலத் தேர்தல் முடிவுகளில் வெளிப்படையான காரணிகளாக இருந்த நிலையில், அமெரிக்க-இஸ்ரேல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தக்கூடிய குடியரசுக் கட்சி தலைமையிலான மசோதா மீதான வாக்கெடுப்பின் விளைவுகள் ஆழமானதாக இருக்கும் என்று வெல்ச் மேலும் கூறினார்.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியைத் தழுவியதோடு ஜனநாயக் கட்சி வெற்றியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |