ஒரு தலைமுறையை காவு கொண்ட செஞ்சோலைப் படுகொலை…

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Northern Province of Sri Lanka
By Theepachelvan Aug 14, 2024 01:06 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

இன்றுள்ள மாணவர்களுக்கு மிகுந்த சமூகப் பொறுப்பும் இனத் தார்மீகமும் இருக்கிறது. இந்த மண்ணில் மாணவர்கள் மாபெரும் இனப்படுகொலைகளை சந்தித்தார்கள். கனவு பிசுபிசுக்கும் அவர்களின் குருதி இந்த மண்ணில் கறையாகப் படிந்திருக்கிறது.

இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்களத்தில் மாணவர்கள் அணிதிரள்வதற்கு இந்தப் படுகொலைகள்தான் தூண்டுகோலாக இருந்தன.

இனப்படுகொலையாலும் போராட்டத்தாலும் இளையவர்களின் குருதி சிந்திய இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் மண்ணுக்காகவும் அதன் மாண்புக்காகவும் வாழ்கின்ற பொறுப்பு இருக்கிறது.

பாடசாலைகள் மீதும் பள்ளி மாணவர்கள்மீதும் போரை தொடுக்கிற, குண்டுகளை கொட்டுகிற இனக்கொலை அரசின் இருண்ட பக்கங்களில் எங்கள் பெண் குழந்தைகளின் குருதியால் எழுதப்பட்டது செஞ்சோலை வடு.

ஒரு தலைமுறை மீதான இனக்கொலையல்லவா இது? ஒரே நாளில், ஒரு சில நிமிடங்களில் ஒன்றல்ல, இரண்டல்ல 53 மாணவிகளை சிங்களப் பேரினவாத்தின் இனக்கொலைப் பசிக்கு வாரிக்கொடுத்த அந்த துயரத்தை மறக்க முடியாமல் நெஞ்சம் இன்றும் துடிக்கிறது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை…

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை…

செஞ்சோலைப் படுகொலை

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடு. 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி. வழக்கமான ஒரு பொழுதாக புலர்ந்தது. நெஞ்சில் கனவுகளை சுமந்த பள்ளி மாணவிகள் முதலுதவிப் பரீட்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குழந்தைகள் கொன்று வீசப்பட்டனர். அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன.

ஒரு தலைமுறையை காவு கொண்ட செஞ்சோலைப் படுகொலை… | Sencholai Massacre A Lost Generation

2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியொரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது. யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம்.

ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன.

எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

தலைவர் பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனத்தின் தீர்க்கதரிசனம்…

தலைவர் பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனத்தின் தீர்க்கதரிசனம்…

மனித விரோதச் செயல்

இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கின்னஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடைவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும்.

ஒரு தலைமுறையை காவு கொண்ட செஞ்சோலைப் படுகொலை… | Sencholai Massacre A Lost Generation

உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப்படுகொலையாகும்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலயக் கல்வி அலுவலம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்துவ அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம். இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது.

இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்சே அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…!

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…!

ஆவணப்படத்தில் வாக்குமூலம் 

நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம்.. என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள்.

ஒரு தலைமுறையை காவு கொண்ட செஞ்சோலைப் படுகொலை… | Sencholai Massacre A Lost Generation

இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன்.

பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள்.

சிங்கள அரசின் வேலை

53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள். இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது. கல்வி உரிமைக்காகப் போராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம்.

ஒரு தலைமுறையை காவு கொண்ட செஞ்சோலைப் படுகொலை… | Sencholai Massacre A Lost Generation

ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது. இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை.

அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா? இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இந்தப் படுகொலைக்கான நீதிக்காக ஏங்குகிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு குறித்ததும் ஆகும். இவைகளுக்கான நீதி முன்வைக்கப்படுகிற நாளித்தான்  இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும். நினைவு கூர்தல் என்ற போராட்டத்தின் வழியாக செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு நீதியை அஞ்சலியாக்குவோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025