அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை…

Sri Lankan Tamils Ampara Eastern Province
By Theepachelvan Aug 09, 2024 12:30 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

இனப்படுகொலையின் குருதியால் நனைந்தது நம் நாட்காட்டி. ஓராண்டின் பெரும்பலான நாட்களில் நமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் ஒரு நாளில் ஈழத்தின் பல பகுதிகளில் இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்பதும் நாம் எத்தகைய இனப்படுகொலையை இலங்கைத் தீவில் எதிர்கொண்டுள்ளோம் என்பதையே காட்டி நிற்கின்றது.

ஈழத்தின் சில ஊர்களை சொல்லும் போது நமக்கு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தான் நினைவுக்கு வருமளவில் ஒரு இனத்தின் கூட்டு நினைவுகளை பேரினவாத்தின் இனவழிப்பு பாதித்திருக்கிறது.

ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் மாத்திரமின்றி அது வரலாறு முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதனால் எழும் உளவியல் பாதிப்புக்கள் நின்று கொல்லும் விசமாக ஒரு இனத்தை சூறையாடுகிறது என்பதே உண்மை.

தலைவர் பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனத்தின் தீர்க்கதரிசனம்…

தலைவர் பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனத்தின் தீர்க்கதரிசனம்…

கிழக்கின் இனப்படுகொலைகள்

கிழக்கின் இனப்படுகொலைகள் ஈழத்தின் கிழக்கில் பல இனப்படுகொலைகள் நடந்தேறி உள்ளன. சிறிலங்கா அரசின் இனவழிப்புச் செயற்பாடுகளால் அதிக பாதிப்புக்களை சுமந்த இடமாக கிழக்கு இருக்கிறது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை எனப் பல இடங்கள் இனப்படுகொலையின் குருதியால் நனைந்த இடங்களாகவே வரலாற்றின் பக்கங்களில் நிலைத்துள்ளன. ஆகஸ்ட் மாத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த சில இனப்படுகொலைகள் தமிழ் இனத்தின் நினைவுகளில் இருந்து அகல மறுகின்றன.

இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி என்ற கிராமத்தில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தின் 6ஆம் திகதி நன்கு திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியே வருகிறது.

மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்காக 70 கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ் கிராமமே திராய்க்கேணி. தமிழ்ப் பண்பாடு முகிழ்ந்த இக் கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமாகும். இக் கிராமம் எங்கும் பரவியிருக்கும் சைவ ஆலயங்கள் இந்தக் கிராமத்தின் தொன்மைக்கு ஆதாரமாயிருக்கும் சான்றுகளாகும்.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…!

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…!

பேரினவாத ஆக்கிரமிப்பு

இந்தக் கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதனைப் போன்றே அம்பாறையின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்துவிட வேண்டும் என்றும் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாக திராய்க்கேணிமீதான இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

தீயில் எரிக்கப்பட்ட முதியவர்கள் இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாளன்று சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த இனவழிப்பாளர்கள், அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 54 தமிழர்களைப் படுகொலை செய்துள்ளனர்.

அத்தோடு அந்த இனவழிப்பு அட்டகாசத்தை அவர்கள் நிறுத்தியிருக்கவில்லை. திராய்க்கேணி கிராமத்தின் வீடுகளினுள் நுழைந்த இனப்படுகொலையாளிகள் முதியவர்கள் பலரை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர். அந்த முதியவர்கள் தீயில் துடிதுடித்து இறந்து போயினர்.

அத்தோடு பதின்மூன்று வயதான சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் சித்திரவதைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் இதன்போது நிகழ்த்தப்பட்டது. கிராமம் எங்கும் இனப்படுகொலையின் வேட்டை பரவியது.

கறுப்பு ஜூலையில் பிடுங்கப்பட்ட குட்டிமணியின் கண்கள்…

கறுப்பு ஜூலையில் பிடுங்கப்பட்ட குட்டிமணியின் கண்கள்…

நீதி

கிராம்ம் எங்கும் உலவிய இனப்படுகொலையாளிகள் தமிழ் மக்களின் வீடுகள் மீது தீயை பற்ற வைத்து வீடுகளை அழித்தனர். இதனால் 350 வீடுகள் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. அன்றைய நாளில் காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது. நாள் முழுவதும் படுகொலையின் ஓலம் பரவிக் கொண்டிருந்தது.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

இப்படுகொலைகளைத் தொடர்ந்த அக்கிராமத்தில் இருந்து சனங்கள் வெளியேறினார்கள். மக்கள் வெளியேறினார்கள் என்பதைவிட துரப்பட்டார்கள் என்பதே பொருத்தமானது. கொலை செய்யப்பட்ட மயிலைப்போடி அன்றைக்கு ஊரைவிட்டுச் சென்ற மக்கள் காரைதீவில் அகதி முகாங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அந்தப் படுகொலைக்குப் பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

அந்தளவுக்கு அந்தப் படுகொலை திராய்க்கேணி மக்களை பாதித்திருந்தது. இந்தப் படுகொலைக்கான நீதியை மக்கள் கோரி நின்றார்கள். 90களில் நடந்த இப் படுகொலைக்கான நீதியை மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திராய்க்கேணி இனப்படுகொலை குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றொரு பேரிடியாக நிகழ்த்தப்பட்டது.

இதற்குப் பிறகு 2003ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர்.

திராய்க்கேணி இனப்படுகொலை

இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்த வலியுறுத்திய போதும் அரசினால் அது கண்டுகொள்ளப்படவில்லை.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

அந்த எச்சங்களும் அந்த சாட்சியங்களும்கூட திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இந்தப் படுகொலையினால் சுமார் 40 பெண்கள் விதவைகளாக்கப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது. கலையரசன் கவலை திராய்க்கேணி இனப்படுகொலைக்கான அஞ்சலி நிகழ்வு ஆண்டு தோறும் அந்தக் கிராமத்தில் நடந்து வருகின்றது.

அந்த வகையில் நடந்த ஆண்டு நடந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் முக்கிய விடயம் ஒன்றைக் கூறியிருந்தார். அதாவது, ‘திராய்க்கேணி தமிழ் மக்கள் அன்றைய காலத்தில் உயிராபத்துக்கு முகம்கொடுத்தனர்.

அவர்கள் இப்போது கூட பல சவால்களுக்கும் நெருங்குவாரங்களுக்கும் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 33 வருடங்களுக்கு முன்பு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்கவில்லை.

கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு…

கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு…

ரணத்தின் நீட்சி

அதற்காக நாங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்…” என்று அவர் கூறியிருப்பது இப்படுகொலையின் ஆறாத ரணத்தின் நீட்சியாகும். இதுவேளை திராய்க்கேணி மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களது இருப்பை இல்லாமல் செய்யும் காரியங்கள் தொடர்வதாகவும் கலையரசன் குற்றம் சுமத்தியிருந்தார்.

அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை… | Ampara Tamil Massacre Details

அன்று திராய்க்கேணி மக்கள் கொல்லப்பட்டது அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவே என்பதும் இன்றும் அதுவே அங்கு தொடர்கின்றது என்பதையும் கலையரசனின் கருத்து எடுத்துரைக்கின்றது. அத்துடன் தமிழ் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறியது போன்று துர்ப்பாக்கிய நிலைக்கு திராய்க்கேணி மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கவலையுடன் கூறிய விடயம், வடக்கு கிழக்கின் பெரும்பாலான கிராமங்கள் எதிர்கொள்ளும் அவலத்தையே காட்டுகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 August, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, புளியங்கூடல், வண்ணார்பண்ணை

11 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020