சிரேஷ்ட பிரஜைகளின் வைப்பு வட்டி வீத அதிகரிப்பு...! அமைச்சர் தகவல்
சிரேஷ்ட பிரஜைகளின் வைப்பு வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.
அத்துடன் வட்டி வருமானத்தில் வாழ்ந்து வரும் பல முதியோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
15% வட்டி விகிதம்
பொருளாதார நெருக்கடிக்கு முன், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வங்கி மற்றும் நிதி நிறுவன கணக்குகளில் ஆண்டுக்கு 15%க்கு மிகாமல் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இந்த வட்டி சதவீதம் ஒற்றை இலக்க சதவீதமாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது.
இந்நிலைமையினால் வட்டி வருமானத்தில் வாழ்ந்த முதியவர்கள் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இவ்விடயத்தை கவனமாகவும் அனுதாபத்துடனும் பரிசீலித்து மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |