தேசபந்து தென்னக்கோன் மீதான தாக்குதல் - மூவர் கைது (Video)
SL Protest
Sri Lanka Violence 2022
By Vanan
இலங்கையின் மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட காவல்துறை அதிகாரியான தேசபந்து தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் கொழும்பில் வைத்து தென்னக்கோன் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
காலிமுகத்திடல் போராட்டத்தின்போது நேற்று தென்னக்கோன் முன்னிலையிலேயே போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சுட்டிக்காட்டியே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
බස්නාහිර පළාත භාර ජේෂ්ඨ නියෝජ්ය පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන්ට එල්ලවූ ප්රහාරය #lka #SrilankanCrisis pic.twitter.com/nhSKX5WpOx
— Dinuk (@22Dinuk) May 10, 2022
இதன்போது காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்