ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரின் மகன் இஸ்ரேல் ‘ட்ரோன்’ தாக்குதலில் பலி
சிரியா மீது இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தலைவர்களின் மகன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் அலி முசா தக்துக்கின் என்பவரின் மகனான ஹசன் அலி தக்தூத் கொல்லப்பட்டதாக KAN செய்திகள் தெரிவிக்கின்றன.
அலி முசா தக்துக் யார்
இஸ்ரேலிய இராணுவ ஆதாரங்களின்படி, கோலன் குன்றுகளுடன் சிரிய எல்லையில் அமைந்துள்ள "கோலான் நெட்வேர்க்" என்று அழைக்கப்படும் ஹிஸ்புல்லா வலையமைப்பை அலி முசா தக்துக், இயக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு கர்பாலாவில் நடந்த தாக்குதலில் ஐந்து அமெரிக்க வீரர்களைக் கொன்ற பின்னர், அவர் சிரியாவில் அமெரிக்க துருப்புக்களால் பிடிக்கப்பட்டார்.
மேலதிக விபரங்களை வெளியிட மறுத்த இஸ்ரேல்
ஈரானிய ஆதரவுடன் செயல்படுவதாக அமெரிக்கா கூறிய நிலையில், ஈராக் காவலுக்கு மாற்றப்பட்டு, 2012ல் விடுவிக்கப்பட்டார்.

இந்த தாக்குதலில் அவர்களுடன் வந்த ஒரு சிரியரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோலன் குன்றுகளின் எல்லைக்கு அருகில் உள்ள பாத் நகரம் மீது தாக்குதல் நடத்தப்ட்டதாக தெரிவித்த இஸ்ரேல் தரப்பு மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |