யாழில் தமிழரசுக் கட்சி மூத்த தலைவரின் மகள் திடீர் மறைவு
இலங்கை தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) நிர்வாக செயலாளரான சேவியர் குலநாயகத்தின் மகள் ஆன் சுமங்கலா (வயது 35) திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை அவர் தனது வீட்டிலிருந்த வேளை திடீர் சுகயீனத்துக்கு உள்ளானார்.
இதையடுத்து, அவர் யாழ். போதனா மருத்துவமனையில் (Jaffna Teaching Hospital ) சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரணத்துக்குக் காரணம்
காதில் ஏற்பட்ட கிருமி தொற்று தாக்கமே அவரின் மரணத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளைய தினம் (29.03.2025) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சூ.சே.குலநாயகம் ஏக புதல்வியான சட்டத்தரணி ஆன் குலநாயகத்தின் திடீர் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 17 உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்ப்பாளர் அறிமுக கூட்டம் எதிர்வரும் 04.04.2025 அன்று மாலை 2 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
