வெளிப்புற சக்தியின் தலையீடு: கபில சந்திரசேனவின் மர்ம மரண வழக்கில் பரபரப்பு
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் சி.டி.ஏ. கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த விசாரணைகளில் முக்கிய ஆதாரங்களாக விளங்கும் ஆய்வக அறிக்கைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் தனது கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடர்புடைய தடயவியல் மருத்துவ அறிக்கைகளை கொழும்பு குற்றப் பிரிவுக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களை விளக்குமாறு அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார்.
காவல்துறை விசாரணைகளின் மெதுவான போக்கை முன்னதாகக் கடுமையாக விமர்சித்திருந்த கோட்டை நீதவான் பாசன் அமரசேன, தனது அதிருப்தியை காவல்துறைமா அதிபருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு ஒக்டோபர் 14ஆம் தி்கதி நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அடையாளம் தெரியாத போதைப்பொருள்
மேலும், கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள், குறித்த அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக ஜூலை 8ஆம் திகதியும் அவர் இதேபோல் விமர்சிக்கப்பட்டார்.

இந்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் ஏதோவொரு வெளிப்புற சக்தியே என்று தெரிகிறது சில விமர்சனங்களும் கடந்த காலங்களில் எழுந்திருந்தன.
அதேவேளையில், கபில சந்திரசேனாவின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்த மரணம் தொடர்பான பல அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே கிடைத்திருந்தபோதிலும், அவரது மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நான்கு குறிப்பிட்ட வகை போதைப்பொருட்கள் தொடர்பான அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்று புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான தடயத் தேடலுடன் மேலதகமாக, புலனாய்வாளர்கள் இறந்தவரின் எண்ணிமத் தரவுகள் குறித்தும் ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கபில சந்திரசேனா பயன்படுத்திய கைப்பேசியிலிருந்து தரவுகளைப் பெறுவதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உட்பட இரண்டு அமைப்புகளிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தரவு
அந்த நிறுவனம், கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை அடுத்த மூன்று மாதங்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கொழும்பு குற்றப் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் விசாரணை நடவடிக்கைகளை மேலும் எளிதாக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட தொலைபேசியில் உள்ள மின்னணு சிம் கார்டை (eSIM) ஒரு வழக்கமான சிம் கார்டாக மாற்றுமாறு சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநருக்கு உத்தரவிட, புலனாய்வாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முந்தைய நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்குப் பதில்கள் பெறப்பட்டுள்ளன என்று கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த மர்ம மரணம் தொடர்பான வழக்கு, மேலதிக விசாரணைக்காக டிசம்பர் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |