மலசல கூடத்தில் தயாரித்து விற்கப்பட்ட உணவு - தமிழர் பகுதியில் சம்பவம்

Food Shortages Batticaloa Sri lanka Food Recipes
By Thulsi Mar 25, 2025 01:49 PM GMT
Report

மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24.03.2025) மட்டக்களப்பு (Batticaloa) - செங்கலடி பொது சுகாதாரப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான நேற்று பொதுசுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது தாக்குதல்...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

யாழில் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது தாக்குதல்...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை

இதன்போது, ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்துள்ளனர்.


இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாத காலம் சிறையில் அடைக்குமாறு 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீதி ஓரத்தில் கொள்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா செல்ல ஆசைப்பட்ட இளைஞர்கள் - விமான நிலையத்தில் நேர்ந்த கதி

கனடா செல்ல ஆசைப்பட்ட இளைஞர்கள் - விமான நிலையத்தில் நேர்ந்த கதி

[0KJTTVK ]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016