செந்தில் குமரன் நிவாரண திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் - இருதய சிகிச்சை பிரிவு (படங்கள்)

Mullaitivu Canada
By Vanan Jul 20, 2023 03:43 AM GMT
Report

செந்தில் குமரன் நிவாரண திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட இருதய சிகிச்சை பிரிவு ஒன்றினை ,  இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திறந்து வைத்துள்ளார். 

புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் செந்தில்குமரன்  என்பவரால் , முன்னெடுத்துச் செல்லப்படும் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் சென்ற வருட இறுதியில் "கனடா மல்லாவி" இரத்த சுத்திகரிப்பு நிலையமும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாஞ்சோலை மருத்துவமனையில் "டொரோண்டோ முல்லை" இரத்த சுத்திகரிப்பு நிலையமும் அமைத்து முல்லைத்தீவு மக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டது.

மக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டது

செந்தில் குமரன் நிவாரண திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் - இருதய சிகிச்சை பிரிவு (படங்கள்) | Senthil Kumaran Relief Scheme Cardiology Unit Open

இதன் தொடர்ச்சியாக மாஞ்சோலை மருத்துவமனைக்கு மேலுமொரு வரப்பிரசாதமாக "மார்க்கம் முல்லை" இருதய நோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு, நேற்றையதினம் (19) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

நேற்று (19) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் கனகசபாபதி வாசுதேவா தலையையில் இடம் பெற்ற நிகழ்வில் ,இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்ததை தொடர்ந்து , சிரேஷ்ட இருதய சிகிச்சை நிபுணர் பூபாலப்பிள்ளை லக்ஸ்மன்  கட்டிடத்தினை நாடாவை வெட்டி திறந்து வைத்தார் .

செந்தில் குமரன் நிவாரண திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் - இருதய சிகிச்சை பிரிவு (படங்கள்) | Senthil Kumaran Relief Scheme Cardiology Unit Open

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர், சிரேஸ்ர இருதய சிகிச்சை நிபுணர் எம் குருபரன் மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

பல உயிர்களை முல்லைதீவு மாவட்டம் இழந்திருக்கிறது

கடந்த காலங்களில் இந்த சிகிச்சை பிரிவு இல்லாமல் பல உயிர்களை முல்லைத்தீவு மாவட்டம் இழந்திருக்கிறது.

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் வாழும் வறிய தமிழ் மக்களுக்கு தனது நிவாரண அமைப்பின் ஊடாக கனடாவில் பாட்டு பாடி நிதி சேகரித்து பல நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வரும் பாடகர் செந்தில் குமரன்,  மேற்குறிப்பிட்ட திட்டங்களை விட , இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் மருத்துவர்களுடான நட்பினை ஏற்படுத்தி, மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நூற்றிற்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து,  அவர்களுக்கு மீள்வாழ்வு அளித்துள்ளார் .

கிளிநொச்சியில் நடமாடும் மருத்துவ சேவையினை கடந்த காலங்களில் ஸ்தாபித்து , படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று வைத்தியம் வழங்கும் சேவையினை தொடர்ச்சியாக வழங்கி கொண்டிருப்பது , இதனால் பயனுறும் நோயாளிகளுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கும் பெரும் உபகாரமாக உள்ளது .

இது மட்டுமல்லாமல் பல கோடிகள் பெறுமதியான வாழ்வாதாரங்கள் இவரின் நிறுவனத்தால் சிறுநீரக நோயாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றது.

மொத்தத்தில் கடந்த எட்டு மாதங்களில் மாத்திரம்  18,382,080 ரூபாய் நிதி முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பினரால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025