பிரமாண்டமாக நடத்தும் வலிமை எங்களுக்கு மட்டுமே..! நாம் 200 இல் செந்தில் தொண்டமான்
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நடைபெற்ற நாம் 200 நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இந்நிகழ்வை நடத்திய நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
செந்தில் தொண்டமான் தொடர்ந்து உரையாற்றுகையில், இவ்விழாவை சிறப்பித்து தந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச,இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்க், ப. ஜ.க முன்னாள் தேசிய பொது செயலாளர் ராம் மாதவ், தமிழ் நாட்டு பா. ஜ.க தலைவர் அண்ணாமலை,சட்ட மன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலையக மக்கள் 200
மலையகத்தின் 200வது நிகழ்வை கொண்டாடும் நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மலையக மக்கள் 200 வருடங்களுக்கு முன்னதாக ஆதி லெட்சுமி என்ற கப்பலில் இலங்கைக்கு பெரும் நம்பிக்கையுடன் வந்தடைந்தனர்.
இலங்கையை வந்தடைந்த பின்னர் நம்பிக்கையை இழந்து இருந்த சூழ்நிலையில், அவர்களுடைய நம்பிக்கை மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் படிப்படியாக நிறைவேற்றப்பட்டது.
மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றம் சென்றததன் பின்னரே இருளில் இருந்த மலையகத்திற்கு முழுமையான மின்சாரம் கிடைத்ததோடு, இலங்கையில் நாடற்றவர்களாக வாழ்ந்த நம் சமூகத்தை, இலங்கையை உலக ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாடுகளில் தூதுவர்களாக மலையக மக்களுக்கு நியமனம் பெற்றுக்கொடுத்தார் சௌமியமூர்த்தி தொண்டமான்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
அகதிகளாக இந்நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த நம் சமூகத்திற்கு காவல் உத்தியோகஸ்தர்களை பெற்று தந்தது, மலையகத்தில் பாடசாலைகளை உருவாக்கி, தோட்ட பகுதியில் உள்ளவர்களை ஆசிரியர்களை உருவாக்கினார்.
மலையக மக்களின் ஒவ்வொரு உரிமைகளின் பின்புலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஆற்றிய சேவைகளை எவராலும் மறுக்க முடியாது.
1948 ஆம் ஆண்டு மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட போதிலும்,அவர்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து அகிம்சை வழியில் போராடி சிறிமா சாஸ்திரம் ஒப்பந்தத்தின் ஊடக சௌமிமூர்த்தி தொண்டமான் படிப்படியாக குடியுரிமை பெற்றுக் கொடுத்தார்.
இதில் இறுதிக் கட்டத்தால் 2003 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இராஜதந்திர போக்கால் முழுமையான குடியுரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது.
தனி வீட்டு திட்டம்
மலையக மக்கள் பல வருடமாக லயன் குடியிருப்புகளில் இருந்த நிலையில் அவர்களுக்காக முதல் முதலாக தனி வீட்டு திட்டம் 1985 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சரவை பத்திரம் ஊடாக அங்கீகாரம் பெற்று, அதனை நடைமுறைப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் 2014 ஆம் ஆண்டு அமைச்சர் பொறுப்பில் இருந்து வெளியேறிய போது மலையக மக்களுக்காக 30000 யிற்கு மேற்பட்ட தனி வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட்டுள்ளது.
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆனாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 85 வருட பயணித்த்தின் போது தான் அம்மக்களுடைய அனைத்து உரிமைகளும் வென்றெடுக்கப்பட்டது.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானுடைய அமைச்சின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட 10000 வீட்டுத்திட்டம் எதிர்காலத்தில் மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேச்சஸ் காணி என்பன மலையகத்தில் வரலாறு படைக்கும்.
பொருளாதார நெருக்கடி
இந்நிகழ்வில் ஜீவன் தொண்டமானுடன் இணைந்து முழு பங்களிப்பாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தலைவி அனுசியா சிவராஜா,பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல், போசகர் சிவராஜா, ஜெகதீஸ்வரன், உப தலைவர்களான அசோக் குமார்,பிலிப் குமார்,பரத் அருள் சாமி, சட்சு,பாஸ்கர், ராஜாமணி, திருக்கேஸ், கந்தசாமி, சிவலிங்கம், அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் அர்ஜுன் ஜெயராஜ், ராம் மற்றும் கட்சியின் பிரதி செயலாளர் செல்லமுத்து ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலையக மக்களுக்கு தனி வீடுகள், காணி உரிமை பெற்று கொடுக்க முழு முயற்சியுடன் செயற்பட்ட ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்திய பிரதமர் நரந்திரமோடி அவர்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது 4 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியமை,தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய உதவிகளை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.
நாம் 200 நிகழ்வை நடக்குமா? நடக்காதா?என பலரால் விமர்சனங்கள் எழுந்திருந்து. அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து மலையகத்தில் மாத்திரம் அன்றி தலைநகரிலும் மட்டுமன்றி உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் பிரமாண்டமாக நடத்தும் வலிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.