திருகோணமலையில் நடைபெறப்போகும் பண்பாட்டு படுகொலை! செந்தில் தொண்டமானின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு
திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்கல் விழாவானது ஒரு பண்பாட்டு படுகொலையாகவே கருத வேண்டுமென திருகோணமலை முத்தமிழ் சங்க தலைவர் மாயன் சிறிஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் விழா தொடர்பில் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்தமிழர்கள் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு உள்ளானார்கள். அந்த இனப்படுகொலையில் இன்னொரு வடிவமாகவே பண்பாட்டு படுகொலை விளங்குகிறது.
அந்த பண்பாட்டு படுகொலையை எவ்வாறு நிகழ்த்துவது தொடர்பில் பேரினவாத இலங்கை அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த அடிப்படையிலேயே தான் திருகோணமலையில் பொங்கல் விழா முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.