ஆயிரக்கணக்கான பயணிகளுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த சொகுசு கப்பல்
Hambantota
Port of Colombo
Sri Lanka Tourism
Sri Lanka
By Sathangani
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக 'செரினேட் ஒப் த சீஸ்' (Serenade of the Seas) எனும் உல்லாசக் கப்பல் நேற்று முன்தினம் (29) வருகை தந்துள்ளது.
இந்த கப்பலில் 1,950 பயணிகள் மற்றும் 890 பணியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த பத்தாவது கப்பல் இது என குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்திற்கு பயணம்
2003 ஆம் ஆண்டு முதன் முதலில் கடல் பயணத்தை ஆரம்பித்த 'செரினேட் ஒப் த சீஸ்' கப்பலை சர்வதேச ரோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தொலைதூர அயல்நாட்டு இடங்களுக்கு பயணிப்பதற்காக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கப்பல் அடுத்த பயணத்தை கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்