சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான சேவை தொடரும் - ஆளும் கட்சி தெரிவிப்பு
Srilanka
challenge
G. L. Peiris
Ruling Party
By MKkamshan
சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், வெளிவிவகாரத்துறை அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
ஐந்து வருட காலத்திற்குள் தேசிய தேர்தல்களில் வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன நிலைத்து நிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,