கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள்
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்றாலே எல்லோரும் கீரை பேரீச்சம் பழத்தை தான் முதலில் பரிந்துரைப்பாளர்கள்.
அவற்றை விட வேறு சில உணவுகளிலும் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
அது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு ரத்தத்தில் ஹீமோகுளோபினையும் அதிகரிக்கும்.
இந்த ஹீமோகுளோபின்கள் தான் உடல் முழுவதும் ரத்தத்தின் வழியான ஒக்சிஜனை சுமந்து செல்கின்றன.
அத்தோடு அனீமியா என்னும் ரத்தச் சோகையைத் தீர்க்கவும் உதவுகிறது. இப்பதிவின் ஊடாக இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன என பார்க்கலாம்.
மதிவதனி - துவாரகா இருப்பு தொடர்பில் பதிலளித்த முன்னாள் தளபதி! |
பயறு வகைகள்
பருப்பு மற்றும் பயறு வகைகள் என்றாலே நாம் அவை புரத மூலங்கள் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவற்றில் இரும்புச்சத்தும் கணிசமான அளவில் இருக்கிறது.
இரும்புச்சத்துடன் புரதமும் இணையும்போது உடல் வலுவாவதோடு தசை வளர்ச்சியும் கூடும். குறிப்பாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
சியா விதைகள்
சியா விதையை ஏதோ எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் விதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம். அதனால் எல்லோருமே இதை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த சியா விதைகளில் இரும்புச் சத்தும் அதிகமாகவே இருக்கின்றன. இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படாமலும் தடுக்கிறது.
முந்திரி
முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. அத்தோடு கணிசமான அளவில் இரும்புச் சத்தும் இருக்கிறது.
ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் 4 முந்திரி பருப்பை காலை வேளையில் சாப்பிட்டு வரலாம்.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டிய மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்.
இதில் புரதங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றோடு இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தினமும் ஒரு கைப்பிடி அளவாவது கொண்டைக்கடலையை சாப்பிடக் கொடுப்பது ரத்தச் சோகை வராமல் தடுக்கும்.
அவர்களுடைய தசை வளர்ச்சியும் மேம்படும்.
பூசணி விதை
பூசணிக்காயின் விதை மிக அதிக அளவு புரதங்களும் ஏராளமான வைட்டமின்களையும் கொண்டிருக்கிறது.
அத்தோடு இதில் இரும்புச்சத்தும் அதிகம். அதனால் பூசணி விதையை வறுத்து தேநீர் குடிக்கும் நேரங்களில் சாப்பிடலாம்.
பொடித்து சூப் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். சாலட், பேக்கிங் உணவுகளிலும் கூட சேர்க்கலாம்.
டார்க் சொக்லெட்
டார்க் சொக்லெட்டில் காஃபைன் இருக்கிறது. அதேபோல அதில் இரும்புச்சத்தும் இருக்கிறது.
மன ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். அதிகமாக சொக்லெட் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஆனால் குழந்தைகள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று அடம் பிடிக்கும் சமயங்களில் ஒரு சிறு துண்டு டார்க் சொக்லெடடை சாப்பிடக் கொடுங்கள்.
பெண்களும் இதை தினமும சிறிதளவு எடுத்துக் கொள்வது நல்லது.
கோழிக்கறி
சிக்கனில் புரதச்சத்துக்கள் அதிகம். அதிலும் குறிப்பாக கோழியின் மார்புப் பகுதியில் புரதம் அதிகமாகக் கிடைக்கும் என்று சொல்வார்கள்.
அதேபோல கோழியின் தொடைப்பகுதியில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறதாம்.
அதனால் சிக்கன் வாரத்துக்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வது தசை வலிமையைக் கூட்டவும் அனீமியாவைத் தடுக்கவும் உதவும்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
20 மணி நேரம் முன்