கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள்

Healthy Food Recipes
By Beulah Aug 16, 2023 12:04 PM GMT
Report

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்றாலே எல்லோரும் கீரை பேரீச்சம் பழத்தை தான் முதலில் பரிந்துரைப்பாளர்கள்.

அவற்றை விட வேறு சில உணவுகளிலும் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளது.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

அது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு ரத்தத்தில் ஹீமோகுளோபினையும் அதிகரிக்கும்.

இந்த ஹீமோகுளோபின்கள் தான் உடல் முழுவதும் ரத்தத்தின் வழியான ஒக்சிஜனை சுமந்து செல்கின்றன.

அத்தோடு அனீமியா என்னும் ரத்தச் சோகையைத் தீர்க்கவும் உதவுகிறது. இப்பதிவின் ஊடாக இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன என பார்க்கலாம். ​

மதிவதனி - துவாரகா இருப்பு தொடர்பில் பதிலளித்த முன்னாள் தளபதி!

பயறு வகைகள்

கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள் | Seven Foods Rich In Iron Than Spinach

பருப்பு மற்றும் பயறு வகைகள் என்றாலே நாம் அவை புரத மூலங்கள் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவற்றில் இரும்புச்சத்தும் கணிசமான அளவில் இருக்கிறது.

இரும்புச்சத்துடன் புரதமும் இணையும்போது உடல் வலுவாவதோடு தசை வளர்ச்சியும் கூடும். குறிப்பாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையாமல் பார்த்துக் கொள்ளும். ​

சியா விதைகள்

கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள் | Seven Foods Rich In Iron Than Spinach

சியா விதையை ஏதோ எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் விதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம். அதனால் எல்லோருமே இதை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த சியா விதைகளில் இரும்புச் சத்தும் அதிகமாகவே இருக்கின்றன. இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படாமலும் தடுக்கிறது.

​முந்திரி

கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள் | Seven Foods Rich In Iron Than Spinach

முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. அத்தோடு கணிசமான அளவில் இரும்புச் சத்தும் இருக்கிறது.

ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் 4 முந்திரி பருப்பை காலை வேளையில் சாப்பிட்டு வரலாம். ​ ​

கொண்டைக்கடலை

கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள் | Seven Foods Rich In Iron Than Spinach

கொண்டைக்கடலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டிய மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்.

இதில் புரதங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றோடு இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தினமும் ஒரு கைப்பிடி அளவாவது கொண்டைக்கடலையை சாப்பிடக் கொடுப்பது ரத்தச் சோகை வராமல் தடுக்கும்.

அவர்களுடைய தசை வளர்ச்சியும் மேம்படும். ​

பூசணி விதை

கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள் | Seven Foods Rich In Iron Than Spinach

பூசணிக்காயின் விதை மிக அதிக அளவு புரதங்களும் ஏராளமான வைட்டமின்களையும் கொண்டிருக்கிறது.

அத்தோடு இதில் இரும்புச்சத்தும் அதிகம். அதனால் பூசணி விதையை வறுத்து தேநீர் குடிக்கும் நேரங்களில் சாப்பிடலாம்.

பொடித்து சூப் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். சாலட், பேக்கிங் உணவுகளிலும் கூட சேர்க்கலாம். ​

டார்க் சொக்லெட்

கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள் | Seven Foods Rich In Iron Than Spinach

டார்க் சொக்லெட்டில் காஃபைன் இருக்கிறது. அதேபோல அதில் இரும்புச்சத்தும் இருக்கிறது.

மன ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். அதிகமாக சொக்லெட் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஆனால் குழந்தைகள் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று அடம் பிடிக்கும் சமயங்களில் ஒரு சிறு துண்டு டார்க் சொக்லெடடை சாப்பிடக் கொடுங்கள்.

பெண்களும் இதை தினமும சிறிதளவு எடுத்துக் கொள்வது நல்லது. ​

கோழிக்கறி

கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள ஏழு உணவுகள் | Seven Foods Rich In Iron Than Spinach

சிக்கனில் புரதச்சத்துக்கள் அதிகம். அதிலும் குறிப்பாக கோழியின் மார்புப் பகுதியில் புரதம் அதிகமாகக் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

அதேபோல கோழியின் தொடைப்பகுதியில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறதாம்.

அதனால் சிக்கன் வாரத்துக்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வது தசை வலிமையைக் கூட்டவும் அனீமியாவைத் தடுக்கவும் உதவும்.  

ReeCha
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023