வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர்
வியட்நாமின் தெற்கு பகுதியில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் தற்போதுவரை ஏழு பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டின் லாம் டோங் மாகாணத்திலிருந்து அருகிலுள்ள வர்த்தக மையமான ஹோ சி மின் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை நடந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் தீ விபத்து
24 இருக்கைகள் கொண்ட குறித்த பேருந்தானது இவ்வாறு விபத்துக்கான சந்தர்பத்தில் அதில் இருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர் என்று அந்நாட்டு காவல்துறை தலைமையிலான பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி மேற்படி செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து வியட்நாம் காவல்துறை விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்