முடக்கப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட எழுவரின் சொத்துக்கள்

Sri Lanka Politician Bribery Commission Sri Lanka Money
By Sumithiran Oct 05, 2024 09:10 PM GMT
Report

 அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு நபர்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த சந்தேக நபர்கள் அவர்களது சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள்

இது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகையில், இந்த ஏழு நபர்களிடம் அவர்கள் சாதாரண சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு அதிக சொத்துக்களை எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட எழுவரின் சொத்துக்கள் | Seven Politicos Officers Face Asset Freeze

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் சிலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் இவ்வளவு பெரிய சொத்துக்களை பெற்று வந்ததாக கூறுவது முற்றிலும் தவறானது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் ‘அவுட்’

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் ‘அவுட்’

பல அரசியல்வாதிகள், விசாரணைகளுக்கு உதவும் வகையில் அறிக்கைகளை வழங்குவதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பாக வருவதற்கு தயக்கம் காட்டுவதாக அறியமுடிகிறது.

கடந்த அரசாங்கத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சில சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை விளக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

முன்னாள் அமைச்சரின் சாரதி

கறுவாத் தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரைப் பற்றியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முடக்கப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட எழுவரின் சொத்துக்கள் | Seven Politicos Officers Face Asset Freeze

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 5 காப்புறுதிகளை முடக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த வாரம் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

ஜேவிபி மீதான தடையை நீக்கினார் வலதுசாரி ஜே.ஆர்: புலிகள் மீதான தடையை நீக்குவாரா இடதுசாரி அனுர!

ஜேவிபி மீதான தடையை நீக்கினார் வலதுசாரி ஜே.ஆர்: புலிகள் மீதான தடையை நீக்குவாரா இடதுசாரி அனுர!


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தனது நெருங்கிய சகாக்களின் பெயர்களில் சம்பாதித்ததாகக் கூறப்படும் ஏராளமான சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026