வெளிநாடொன்றில் பாடசாலையில் துப்பாக்கிசூடு : ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் பலி
ஒஸ்ரிய(austria) நாட்டில் உயர்தர பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்திய மாணவர் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
பாடசாலையில் தான் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளானதாகக் கருதிய ஒரு மாணவர் இந்த தாக்குதலை நடத்திய பின்னர் அங்குள்ள கழிப்பறை ஒன்றுக்குச்சென்று தாக்குதல் நடத்திய அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்ததாக்குதலில் ; 7 ஆம் வகுப்பில் படிக்கும் மூன்று சிறுமிகளும் மூன்று உயரதர மாணவர்களும் கொல்லபட்ட அதேவேளை ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல் நடந்த பாடசாலை நண்பகல் அளவில் காவற்துறையின் கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் படுகாயம்
இருப்பினும் விவரங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. சிறப்புப் பிரிவுகள் உட்பட சம்பவம் நடந்த இடத்தில் பாரிய காவல்துறை பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
You may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        