பல லட்சம் போனஸ்; ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிறுவனர்!
நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல இலட்சம் ரூபா போனஸ் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் அவுஸ்ரேலியாவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்ரேலியாவின் மிகவும் பிரபலமான இரும்பு தாது சுரங்கம் நடத்தும் ராய் ஹில் நிறுவனத்தின் பெண் நிறுவனரே இந்த போனஸை கொடுத்துள்ளார்.
போனஸ்
உலகில் உள்ள பிரபலமான நிறுவனங்கள் பல தனது பணியாளர்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பல நிறுவன ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், குறித்த இரும்பு தாது சுரங்கம் நடத்தும் ராய் ஹில் நிறுவனத்தின் நிறுவனரான ஜினா ரைன்ஹார்ட் தனது ஊழியர்களுக்கு பல இலட்சம் ரூபா போனஸ் வழங்கியிருக்கின்றார்.
நிறுவனர் ஜினா ரைன்ஹார்ட் தன்னுடைய ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக 1 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது 82 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.
ஆச்சரியப்படும் ஊழியர்கள்
இந்த நிலையில், ராய் ஹில் நிறுவனத்தால் பல லட்சம் போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஊழியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்குறைப்பு அச்சத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு ராய் ஹில் நிறுவனத்தின் இந்த போனஸ் கிடைத்திருப்பது மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிறுவனர் ஜினா ரைன்ஹார்ட்
ராய் ஹில் நிறுவனத்தின் நிறுவனரான ஜினா ரைன்ஹார்ட் 34 பில்லியன் அவுஸ்ரேலிய டாலர் சொத்துகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்த நிறுவனத்தை கடந்த சில ஆண்டுகளாக நல்ல இலாபத்துடன் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.