எரிபொருளை பதுக்கி வைத்துள்ள அமைச்சர்கள் - ஆளும் தரப்பு எம்.பி வெளிப்படை
srilanka
fuel
ministers
Geetha Kumarasinghe
By Sumithiran
ஒரு வருடத்திற்கு தேவையான எரிபொருளை தாம் வாங்கி வைத்துள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறைக்கு பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பெந்தர எல்பிட்டியவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
