விசேட சுற்றிவளைப்பு! ஒளிந்திருந்த 531 பேர் உள்ளடங்கலாக பலர் கைது
Police
Arrest
SriLanka
By Chanakyan
மேல் மாகாணத்தில் காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றுக் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.