திருகோணமலை - சீனிபுர பகுதியில் கடும் வறட்சி
திருகோணமலை - கந்தளாய், சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக அப்பகுதியிலுள்ள கிணறுகளின் நீர்மட்டம் வற்றியுள்ளதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கந்தளாய் பிரதேச சபையினால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் தற்போதைய தேவைக்கு அந்தளவு நீர் போதுமானதாக இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வறட்சி காரணமாக காடுகளிலும் நீராதாரங்கள் வற்றியுள்ளதால், குடிநீரைத் தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
எனவே, சீனிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26