வங்காள விரிகுடா கடற்பரப்பில் மோசமான வானிலை - பலநாள் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

Sri Lanka Fisherman Weather
By Pavi Sep 22, 2026 07:00 AM GMT
Report

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் கடற்றொழில் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு நோக்கி சற்று சாய்ந்த நிலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இன்று அதிகாலை 5.30 மணியளவில் அதே கடற்பரப்பில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் குறித்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குருநாகலில் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை மடக்கிய காவல்துறையினர் - 3 பேர் கைது

குருநாகலில் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை மடக்கிய காவல்துறையினர் - 3 பேர் கைது

ஒடிசா கடற்கரை

அதனைத் தொடர்ந்து அது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் மோசமான வானிலை - பலநாள் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை | Severe Weather Warning For Fishermen Sri Lanka

'Advisory' என குறிப்பிடப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் அவ்வப்போது கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.

'Warning' என குறிப்பிடப்பட்டுள்ள கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அட்சரேகை 5 முதல் 22 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 85 முதல் 100 வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து விலகிச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

கன்சைட் முகாம் வழக்கு : முன்னாள் கடற்படை வீராங்கனைகள் இருவருக்கு விளக்கமறியல்!

கன்சைட் முகாம் வழக்கு : முன்னாள் கடற்படை வீராங்கனைகள் இருவருக்கு விளக்கமறியல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023