பாடசாலை வாகனத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு - சாரதி கைது..!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kiruththikan
பிலியந்தலையில் வாகனம் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலை வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு மாணவியின் முகத்தில் எதனையோ தெளித்துவிட்டு மயக்கமடைய செய்த பின்னர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் விசாரணையில் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி