15 வயது சிறுவனை வன்புணர்விற்குட்படுத்திய காவல்துறை மொழிபெயர்ப்பாளர்!
வவுனியாவில் 15 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் வவுனியா காவல் நிலையத்தின் மாவட்ட சமுக காவல்துறை பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட சமுக காவல்துறை பிரிவின் உட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றும் குறித்த நபர், நகர்ப்புறத்தை அண்டிய பாடசாலை மாணவன் ஒருவனை வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை

வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவனே வன்புணர்விற்கு உட்படுத்தபட்டுள்ளதாகவும் குறித்த சிறுவனை வவுனியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவராவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்