ஆசியாவின் பணக்கார நடிகராக இடம்பிடித்தார் ஷாருக்கான்
Shah Rukh Khan
Actors
Hollywood
By Sumithiran
இந்திய நடிகர் ஷாருக்கான் சமீபத்திய தரவரிசையில் ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
ஷாருக்கானின் நிகர மதிப்பு 770 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர் உலகின் பணக்கார நடிகர்களில் நான்காவது இடத்தில் உள்ளார்.
உலக பணக்கார வரிசைகளை பின் தள்ளி
உலக புள்ளிவிவரங்கள் வெளியிட்ட உலகின் எட்டு பணக்கார நடிகர்களின் பட்டியல் டொம் குரூஸ், ஜாக்கி சான் மற்றும் ஜோர்ஜ் குளூனி போன்ற நடிகர்களை மிஞ்சி ஷாருக் முன்னோக்கி வந்துள்ளார்.
ஷாருக் இந்த ஆண்டு தனது முதல் படமாக பதான் மூலம் மீண்டும் ரசிகர்கள்முன் வர உள்ளார். இது ஒரு ஆக்சன் படமாக கருதப்படுகிறது.
இந்த பட்டியலின் படி, உலகின் பணக்கார நடிகர் ஜெர்ரி சீன்ஃபீல்ட் நிகர சொத்து மதிப்பு $1 பில்லியன். அவருக்கு அடுத்தபடியாக டைலர் பெர்ரி, டுவைன் ஜோன்சன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.