தமிழர்களைக் காட்டிக்கொடுத்த சாணக்கியன்... போர்க்குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தவர் சாணக்கியனே (Shanakiyan) என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு எதிராக கூக்குரலிட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பதற்காக வேலை செய்த சாணக்கியன் இப்போது தன்னை ஒரு தமிழ் தேசிய வாதியாக காட்ட முனைகின்றார் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குழப்பங்களை விளைவித்த நாலக கொடகேவா
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐ.நா தீர்மானத்தின் போது நாலக கொடகேவா (Nalaka Godahewa) பெரும் குழப்பங்களை விளைவித்தவர்.
ஐ.நாவில் தமிழ் மக்களின் நீதி கோரிய போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை குழப்பவாதிகளாக காட்டியவர். அன்று கோட்டாபயவின் (Gotabaya Rajapaksa) பிரத்தியேக செயலாளர் மற்றும் ஆலோசகராக இருந்தார்.
ஆனால் இன்று அவர் சஜித்தின் (Sajith Premadasa) ஆலோசகராக வந்து விட்டார். இன்று சாணக்கியனும் சுமந்திரனும் (M. A. Sumanthiran) அவருடன் கூட்டுச் சேர்ந்து விட்டனர்.
சாணக்கியனும் கஜேந்திரகுமாரும் (Gajendrakumar) தமிழ் மக்கள் மத்தியில் நண்பனின் வடிவில் இருக்கின்ற எதிரிகள். தமிழ் மக்களுடைய ஐக்கியத்தை, நல்வாழ்வை, தேசிய அபிலாஷைகளை நாசமாக்குவதே அவர்களின் வேலையாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களைப் பற்றி பேசுகின்றது இன்றைய ஊடறுப்பு ....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |