தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எவரும் சிறிலங்காவின் அதிபராக வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்
சிறிலங்காவின் அடுத்த அதிபராக வர நினைக்கின்ற எவருமே தமிழரசுக் கட்சியின் ஆதரவு இன்றி அதிபராக வரமுடியாதளவிற்கு தமிழரசுக் கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் 126ஆவது ஜனன தினத்தையிட்டு நேற்று (31) தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் மட்டக்களப்பில் தந்தை செல்வா பூங்காவில் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதில் எந்த தேர்தல் முதல்வரும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil wickremesinghe) மட்டுமே தெரியும்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் எந்தொரு சந்தர்ப்பத்திலும் நான் எங்கள் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும்.
இல்லாவிடில் எங்கள் மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான விடயத்தையும் செய்யக்கூடாது இதைப் பாதுகாப்பது தான் கட்சியின் பிரதானமான பொறுப்பு என தந்தை செல்வா சொன்னார்.“ எனத் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |