CID-யின் உயர் பதவிக்கு முதல் தடவையாக பெண் ஒருவர் நியமனம்
sri lanka
people
shavendra silva
By Shalini
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
2007 ஆம் ஆண்டு உதவி காவல்துறை அத்தியட்சகராக காவல்துறையில் இணைந்துகொண்ட இவர், 14 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ளார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமாணி பட்டத்தையும், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்