நாடு திரும்பும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
srilanka
covid-19
shavendra silva
By Vasanth
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலத்தினை குறைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய தனிமைப்படுத்தல் காலத்தினை 14 நாட்கள் முதல் 7 நாட்களாக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு, தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதனால் வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.