திருமண நிகழ்வுகள் உட்பட மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை! இராணுவ தளபதி விசேட அறிவிப்பு
srilanka
colombo
shavendra silva
By S P Thas
நாட்டில் தற்போது நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்