ஹசீனாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை: பங்களாதேஷ் தரப்பு அறிக்கை
Sheikh Hasina
Pakistan
Death Penalty
World
By Pavi
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்கொள்வதைத் தவிர வேறு சட்டப்பூர்வ வழிகள் எதுவும் இல்லை என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் மாதம் நாடு திரும்பவுள்ளதாக முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைமை வழக்கறிஞர் எச்சரிப்பு
இந்தப் பின்னணியில், ஷேக் ஹசீனா மரண தண்டனையை எதிர்கொள்வதைத் தவிர வேறு எந்தவொரு சட்டப்பூர்வ வாய்ப்பும் இல்லை என பங்களாதேஷ் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்