இந்தோனேசிய கடலில் தீப்பற்றிய கப்பல்! ஒருவர் மாயம் - 274 பேர் பத்திரமாக மீட்பு
accident
fire
ship
By Vanan
இந்தோனேசிய தீவுக் கூட்டத்தில் உள்ள சனானா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கே,எம். கர்யா இந்தாஹ் என்ற கப்பலிலேயே குறித்த தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த கப்பலில் 275 பேர் வரையில் பயணித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட தீயை அடுத்து அதில் பயணித்த 275 பேரில் 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 43 வயதான ஒருவர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த நபரை தேடும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்