பயணிகளுடன் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு! 140 பேர் தொடர்ந்தும் மாயம் ஒருவர் உயிரிழப்பு

Indonesia World
By Dhilak Sep 13, 2026 06:07 AM GMT
Report

புதிய இணைப்பு

ஜாவா கடற்பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை 103 பயணிகளை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 140 பயணிகள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று இன்று (13) காலை காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திடீரென நிலவிய மோசமான வானிலை காரணமாக குறித்த கப்பலின் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இதனையடுத்து, காணாமல் போன கப்பலைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கைக்குண்டுத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ஐ.நா. கடும் கண்டனம்

கைக்குண்டுத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ஐ.நா. கடும் கண்டனம்

கடல்வழிப் போக்குவரத்து

சுரபாயா நகரத்திலிருந்து பன்ஜார்மாசின் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளுடன் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு! 140 பேர் தொடர்ந்தும் மாயம் ஒருவர் உயிரிழப்பு | Ship Carrying 243 Passengers Disappeared

Image Credit: firstpost

17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில், கடல்வழிப் போக்குவரத்து முக்கியப் பயண முறையாக விளங்குகிறது.

பாதுகாப்பு தரநிலைகள்

இந்நிலையில், விமானப் பயணத்திற்கான செலவு அதிகம் என்பதால், பொதுமக்கள் பெரும்பாலானோர் குறைந்த கட்டணத்திலான கடல்வழிப் பயணங்களையே தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.

பயணிகளுடன் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு! 140 பேர் தொடர்ந்தும் மாயம் ஒருவர் உயிரிழப்பு | Ship Carrying 243 Passengers Disappeared

இவ்வாறானதொரு பின்னணியில், அந்நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகச் செயல்படுத்தப்படாததால், இத்தகைய ஆபத்தான விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

போலந்தில் அவசர எச்சரிக்கை! ஐரோப்பா முழுவதும் விரைந்த நேட்டோ இராணுவ விமானங்கள்

போலந்தில் அவசர எச்சரிக்கை! ஐரோப்பா முழுவதும் விரைந்த நேட்டோ இராணுவ விமானங்கள்

2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன்: அமெரிக்க படையின் நடவடிக்கை

2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன்: அமெரிக்க படையின் நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026