சிங்கப்பூரில் ஷிரந்திக்கு விசேட மருத்துவப் பரிசோதனை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு , சில விசேட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வார காலமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி , நேற்று (16) திடீரென சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
FCID அழைப்பு
இதனிடையே, அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னர், நுழைவாயில் அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென அவரிடம் FCID முன்னிலையில் முன்னிலையாகுமாறு கோரும் கடிதத்தை கையளித்ததாக ராஜபக்சர் தரப்பினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவான (FCID) முன்னிலையில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு காவல்துறை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |