மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி!
புதிய இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (9) காலை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக இன்று காலை அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதற்கமைய, பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிரிலிய சவிய நிதி முறைகேடு குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
சற்றுமுன்னர் கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இன்று (9) கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளாார்.
கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக நேற்று (8) அவர் சிறைச்சாலை விசேட மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டார்.
இதன்போது வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைய, தேசிய கண் மருத்துவமனையின் விசேட மருத்துவரிடம் அவரை முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |