தொடர் விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு
உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (15) கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து அவர் நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |