நாளையதினம் கண்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள சிரந்தி
Eye Problems
Shiranthi Rajapaksa
Department of Prisons Sri Lanka
Arrest
By Jaso
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச இன்று (8) கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக பல்லேதன்ன, ஷிரந்தி ராஜபக்ச இன்று சிறைச்சாலை மருத்துவமனையில் விசேட மருத்துவர் ஒருவரால் பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
விசேட மருத்துவர் பரிந்துரை
அந்தப் பரிசோதனையைத் தொடர்ந்து, மேலதிக பரிசோதனைகளுக்காக அவரை கொழும்பில் உள்ள தேசிய கண் மருத்துவமனைக்கு நாளை (9) அழைத்துச் செல்லுமாறு அந்த விசேட மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

அதற்கிணங்க, அவரை தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்