தோட்டத்தில் நுழைந்தவர் மீது துப்பாக்கிச் சூடு! துப்பாக்கியுடன் சரணடைந்த சந்தேக நபர்
SriLanka
Gun Shooting
Matala
Raththotta
By Chanakyan
மாத்தளை − ரத்தோட்டை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மிளகு தோட்டமொன்றிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர் மீது, தோட்டத்தின் உரிமையாளர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர், தோட்டத்தின் உரிமையாளர் துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தனது தோட்டத்திற்குள் காட்டு பன்றி நுழைந்ததாக எண்ணியே, இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாக தோட்டத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்