கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூடு - காவல்துறை வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
கொட்டாஞ்சேனை (kotahena) - சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீட்டிற்கு முன்னால் நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் 70 வயதுடைய பெண்ணும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம்
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் பெண்ணொருவர ்உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொட்டாஞ்சேனை , சுமித்ராராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்த ஒரு சந்தேகநபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உடன் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
