மூன்று கொலைகளின் துப்பாக்கிதாரி : அனுராதபுரத்தில் கைது
தென் மாகாணத்தில் இடம்பெற்ற மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 25 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ சிப்பாய்
அம்பலாங்கொடையைச் சேர்ந்த 44 வயதுடைய இராணுவத்தில் இருந்து தப்பியோடிய ஒருவர் மற்றும் மதவாச்சி , அனுராதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 30 வயதுடைய மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று கொலைகளின் துப்பாக்கிதாரியாக செயற்பட்ட இராணுவத்திலிருந்து தப்பியோடிய சந்தேகநபர், அநுராதபுரம்- யாழ்ப்பாணம் சந்தி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் துபாயிலுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பனர் ஒருவரின் கட்டளைக்கிணங்கி அநுராதபுர மாவட்டத்தினுள் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபரிடமிருந்து கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் 88 கிராம் 490 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய இரண்டு சந்தேகநபர்களிடமிருந்தும் 17 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
மூன்று சந்தேகநபர்களும் இன்று (28.10.2025) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்