கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் படுகாயம்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
மாளிகாவத்தை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மாளிகாவத்தை, எச்.ஆர்.ஜோதிபால மாவத்தை பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் இடமொன்றில் வைத்தே அவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலதிக விசாரணை

அதனையடுத்து காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்லைன் வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.