நீதிமன்றம் முன் துப்பாக்கி சூடு சம்பவம் : வெளியான அதிர்ச்சி பின்னணி
புதிய இணைப்பு
மன்னார் (Mannar) நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 மற்றும் 50 வயதுடைய ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் 42 வயது மதிக்கத்தக்கவராவார். காயமடைந்த 38 வயதுடைய பெண் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சகோதரர்கள் படுகொலை
குறித்த பெண் பிறிதொரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குப் பிரவேசித்தவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவமானது, 2022ஆம் ஆண்டு உயிலங்குளத்தில் நடைபெற்ற படுகொலைகளுடன் தொடர்புபட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்த ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக 2023ஆம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
மன்னார் (Mannar) நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்றைய தினம் (16.01.2025) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த மூவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்கான மூவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக செய்திகள் : ஜோசப் நயன்
YOU MAY LIKE THIS...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |